தமிழ்நாடு

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு: தலைவர்கள் வரவேற்பு

DIN

"நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு தமிழக எம்.பி.பி.எஸ். இடங்களில் 85 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிட்டிருப்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
வைகோ: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில், 32,368 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத் திட்ட கேள்வித்தாளை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளை நீட் தேர்வு முடிவுகள் தகர்த்துவிட்டன.
தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு தமிழக எம்.பி.பி.எஸ். இடங்களில் 85 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அன்புமணி: அரசாணை வெளியிட்டு கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களுக்கு ஓரளவு நீதி கிடைக்க வழிவகை செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், சிலர் உடனே உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தடை பெறத் துடிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஜி.கே.வாசன்: நீட் தேர்வு முடிவு தமிழக மாணவர்களிடம் மிகப் பெரிய பின்னடைவையும், பாதிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது கிராமப்புற, ஏழை மாணவர்கள்தான். மாநில பாடத் திட்டத்தில்
படித்த மாணவர்களுக்கு தமிழக எம்.பி.பி.எஸ். இடங்களில் 85 சதவீதம் இட ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT