தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்.: முதல்நாளில் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

DIN

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்ப விநியோகத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) 8,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று ஜூன் 24 }ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் "விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.
இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் மாநில அரசே நிரப்ப உள்ளது. இதன் காரணமாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே விநியோகிக்கப்படுகின்றன.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக 6,542 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்காக 1,837 விண்ணப்பங்களும் என மொத்தம் 8,379 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல்நாளில் 6,123 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 7 }ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 }ஆம் தேதிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு சென்று சேர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT