தமிழ்நாடு

கோவை, நீலகிரி மலைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

DIN

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரியை ஒட்டிய மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர்.
தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி 4 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 102 டிகிரி வெயில் பதிவானது.
மழை: புதன்கிழமை காலை நிலவரப்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 130 மி.மீ., வால்பாறையில் 100 மி.மீ., மழை பதிவானது. குளச்சல், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் தேவலாவில் தலா 50 மி.மீ., மழை பதிவானது.
குழித்துறை, தக்கலையில் 40 மி.மீ, செங்கோட்டை, பேச்சிப்பாறை, நாகர்கோவில், பூதப்பாண்டி, தென்காசி, நடுவட்டம், இரணியல், பொள்ளாச்சி, திருப்பத்தூர், மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

தொண்டி 102
கடலூர் 101
சென்னை, திருத்தணி 100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT