முகப்பு
தமிழ்நாடு

மேகேதாது அணை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி தமிழக விவசாயிகள் போராட்டம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 7 மார்ச், 2017 at 2:17 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி ஆற்றில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி ஏராளமான விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் கடும் வறட்சி நிலவுகிறது. எங்கும் பாறையாக மட்டுமே காட்சி தருகிறது.

Advertisement

இந்த நிலையில், மேகேதாது அருகே காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு காவிரியில்  உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.