தமிழ்நாடு

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்: டி.டி.வி. தினகரன் 'திடீர்' ஆலோசனை 

அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக துணைப்பொதுச்ச செயலாளர் டி.டி.வி. தினகரன் 'திடீர்' ஆலோசனை நடத்தி வருகிறார்.

DIN

சென்னை: அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக துணைப்பொதுச்ச செயலாளர் டி.டி.வி. தினகரன் 'திடீர்' ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தினால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மதம் 12-ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் முதல்வர் எடபபாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல். ஏ வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி முன்னணியினர் பங்கேற்று வருகின்றனர். 

கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து வரும் 22-ஆம் தேதி தில்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ள நிலையில் இந்த ஆலோசனை  முக்கியத்தும் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT