பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்க மலர் வெளியீட்டு விழாவில் கல்வி ஆலோசகர் பன்னீர் செல்வம், 
தமிழ்நாடு

’இயக்கும் சக்தியாக இணையத்தை பயன்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி'

அனைத்து வகை தொழில்நுட்பச் செயல்பாடுகளையும் இயக்கும் சக்தியாக இணையத்தைப் பயன்படுத்தும் கணினி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மலேசிய -ஆசிய பசிபிக் பல்கலைக்கழகக்

DIN

அனைத்து வகை தொழில்நுட்பச் செயல்பாடுகளையும் இயக்கும் சக்தியாக இணையத்தைப் பயன்படுத்தும் கணினி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மலேசிய -ஆசிய பசிபிக் பல்கலைக்கழகக் கணினித் துறைத் தலைவர் வினோத் திருச்செல்வம் கூறினார்.
பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
உலகின் எந்த மூலையில் இருந்தும் இணையத்தின் உதவியுடன் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
வங்கி பணப்பரிமாற்றம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களில் கண்காணிப்புப் பணி, மாநகர சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளை குறித்த நேரத்தில் எரிய வைத்து, அணைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இணையத்தை இயக்கு சக்தியாகப் பயன்படுத்தும் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
இணையத்தின் உதவி இல்லாமல் இனி எதுவும் இல்லை என்று நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மாணவர்கள் தங்களது கணினி தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

மூலிகை மருத்துவம்...

SCROLL FOR NEXT