தமிழ்நாடு

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயி ஒருவர் மயக்கம்!

DIN

புதுதில்லி: தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒருவர் இன்று மயக்கம் அடைந்தன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து 16-ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இவர்களில் மகாராஜன் என்ற விவசாயி நேற்றில் இருந்து  உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டு வந்தார். இன்று காலை அவரை உணவு எடுத்துக் கொள்ளும் படி வலியுறுத்தியும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று நணபகல் அளவில் அவரது உடல் நிலை மோசமாகியதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு  அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கே சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT