தமிழ்நாடு

வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு நிரந்தரத் தடை: அன்புமணி ராமதாஸ்

DIN

வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல்களின் போது வாக்குக்குப் பணம் கொடுத்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில், அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கவும் ஆணையம் தீர்மானித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நூதனமான வழிகளில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவுக்கு ஆணையம் வந்துள்ளது. எனினும், நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய இது மட்டும் போதாது. பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்காக வேட்பாளரை 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்தால் அதிகபட்சமாக ஒரு தேர்தலில் மட்டுமே அவரால் போட்டியிட முடியாது. அதன்
பின் மீண்டும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடக்கூடும்.
எனவே, வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் நிரந்தரமாகவோ, குறைந்தபட்சம் 11 ஆண்டுகளுக்கோ தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் அதிக தொகுதிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள் வாக்குக்குப் பணம் தந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கான சட்டத்திருத்த முன் வடிவுகளை வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மிகப் பெரிய அளவில் மோசடிகள் செய்யப்படுவதால், அதற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT