தமிழ்நாடு

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தம்: முதல்வர் பழனிசாமி அதிரடி!

தமிழகத்தில் ஆறுகளில்  மணல் அள்ளுவது அடுத்த மூன்று ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

DIN

மதுரை: தமிழகத்தில் ஆறுகளில்  மணல் அள்ளுவது அடுத்த மூன்று ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும்.  தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும். ஆற்று மணலுக்கு பதிலாக இனிமேல் மக்கள் எம். சாண்ட் எனப்படும் குவாரி மணலை பயன்படுத்த வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டால் நிலத்தடி நீர் உயரும். இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT