தமிழ்நாடு

மேற்படிப்பில் இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

DIN

சென்னை: மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு வேண்டி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, மேற்படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத மாநில இட ஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம்முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கடந்த 17 நாட்களாக பல்வேரு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இவர்களது விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் இன்று உயர் நீதின்றத்தில் ஆஜரானார்.அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் போராட்டத்தினை முடிவுக்குக்கொண்டு வர, தேவைப்பட்டால் 'எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பயன்படுத்தலாம்.

முதலில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மற்றொரு முறை அவகாசம் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள். பேச்சு வார்த்தையில்  ஒத்து வராவிட்டால் 'எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்ந கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு மருத்துவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதனை அடுத்துபரசு அளித்துள்ள உறுதிமொழியினை ஏற்றும், நீதிமன்றத்தின் அறிவுரைப்படியும் போராட்டம் கைவிடப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT