முகப்பு
தமிழ்நாடு

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு: ரேங்க் முறை ரத்து

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.in, www.tnresults.nic.in, www.tnresults.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வுத்துறையே தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, மாநில-மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் (1, 2, 3) மாணவர்கள் பற்றிய ரேங்க் விவரங்கள் வெளியிடப்படாது எனவும், இந்த புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமையன்று (மே 12) வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளிலேயே பின்பற்றப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல லட்சம் மாணவர்கள் எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஒரு சில மாணவர்களை மட்டும் மாபெரும் வெற்றியாளர்களாகக் கருதி மாநில மற்றும் மாவட்ட தரப்பட்டியல் அறிவிக்கும் நிலை உள்ளது.

இதனை நடப்பாண்டு முதல் கைவிடலாம் என்று உயர்நிலைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்குப் பதிலாக பரந்துபட்ட நிலையில் மாணவர்களை அங்கீகரிக்கும் தனியொரு திட்டத்தை வடிவமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துகளை தமிழக அரசு கவனமாக ஆலோசித்தது. மத்திய இடைநிலை வாரிய நடைமுறையின் அடிப்படையிலும், பெற்றோர் மற்றும் பொது மக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு கொண்டு வரப்பட்ட புகார்களின் படியும், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களைத் தவிர்க்கவும் இந்தக் கல்வியாண்டு (2016-17) முதல் 10,  பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் முறையைக் கைவிடலாம் என்று அரசு கருதுகிறது.

இந்த நடைமுறையை உடனடியாகப் பின்பற்றுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

- செல்போன்கள் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

- மாணவர்களின் செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தேர்வுத்துறையே அனுப்பி வைக்கும்.

- பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

- மாநில அளவில் 1, 2, 3 இடங்கள் என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு இனி ரேங்க் முறை கிடையாது.

- மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர் என்ற சான்று மட்டுமே  வழங்கப்படும்.

- கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை.

- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின்(NCERT)  வரைவு பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதிய அம்சங்களை சேர்த்து பாடதிட்டம் தயார் செய்யப்பட்டு,  பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. அவற்றை அச்சிட்டு வழங்க அரசிடம் அனுமதி கேட்டு பள்ளிக் கல்வித்துறை விண்ணப்பித்துள்ளது.  

- 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

- செல்லிடை பேசியில் (மொபைல் போன்) தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

- 1,2,3  என்ற ரேங்க் பட்டியல் இனி கிடையாது.

- சிறந்த மாணவர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

- மாணவர்கள் மன உளைச்சலை தவிர்க்கவே இந்த திடீர் முடிவு

- பிளஸ் 2 வகுப்பு போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் ரேங்க் பட்டியல் வெளியாகாது.

முழு கட்டுரையைப் படிக்க →