தமிழ்நாடு

பிளஸ் 2: மாநில அளவில் முன்னிலை வகித்த மாணக்கர் பெயர்கள் வெளியிடப்படவில்லை- பரபரப்புக்கு பஞ்சம்

DIN

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், மாநில அளவில் முன்னிலை வகித்த மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதோடு, மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதே சமயம், தமிழகத்தில் முதல் முறையாக, இன்று வெளியான தேர்வு முடிவுகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்திருந்தார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்களின் பெயர்களும், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்களின் பெயர்களும் வெளியிடப்படாததால், பள்ளிகளில் பெரிய அளவில் நடக்கும் கொண்டாட்டங்கள் ஏதும் காணப்படவில்லை.

மாணவ, மாணவிகள் அவரவர் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். பள்ளி அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் பெயர்களை மட்டுமே அறிய முடியும் என்பதால், வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் போது இருக்கும் அந்த பரபரப்புகளும், கொண்டாட்டங்களும் இன்று குறைந்துவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT