தமிழ்நாடு

அரவிந்த் கேஜரிவால் கறுப்பு பணம் மாற்றியதற்கு ஆதாரம் உள்ளது: கபில்மிஸ்ரா

தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சக அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கபில் மிஷ்ரா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதையடுத்து அவர் அமைச்சர் இருந்து

DIN

புதுதில்லி: தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சக அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கபில் மிஸ்ரா பரபரப்பு குற்றச்சாட்டினார். இதையடுத்து அவர் அமைச்சர் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக கபில் மிஸ்ரா தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று 5 ஆவது நாளாக அவருடைய போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், கபில்மிஸ்ரா செய்தியார்களிடம் கூறுகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கறுப்பு பணம் மாற்றியதற்கு ஆதாரம் உள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சி 3 ஆண்டுகளாக கறுப்புப் பணத்தை மறைத்து வைத்துள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதன் மூலம் கட்சித் தொண்டர்களையும், மக்களையும் ஆம் ஆத்மி ஏமாற்றி வருகிறது.

மேலும், மொகாலா கிளினிக் மோசடியை வெளிப்படுத்துவேன். இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். 45 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி இணையதளத்தில் வெறும் ரூ.19 கோடி மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு உண்மையான விவரங்களை ஆம் ஆத்மி அளிக்கவில்லை. நன்கொடை விபரத்தையும் ஆம் ஆத்மி மறைத்துள்ளது. அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம் ஆத்மிக்கு நிதி அளிக்கும் பல நிறுவனங்களில் பலர் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தனர். பணமதிப்பு நீக்கத்தின் போது சோதனைகளையும் இந்த நிறுவனங்கள் எதிர்கொண்டன என்று கபில் மிஸ்ரா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT