தமிழ்நாடு

ரஜினி பேச்சு மகிழ்ச்சி: ஸ்டாலின்

DIN

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேச்சு தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: என்னை சிறந்த நிர்வாகி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக ரஜினியின் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் மகிழ்ச்சி.
அன்புமணி: ரஜினிகாந்த் நல்ல நடிகர். அவர் நடிப்பைப் பார்ப்பேன். ரசிப்பேன். இப்போது தமிழகத்துக்குத் தேவை நல்ல நடிகர் இல்லை. திறமையான நிர்வாகி. தமிழகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. அதனால் தமிழகத்துக்கு திறமையான நிர்வாகிதான் தேவை.
சீமான்: தமிழகம் முழுவதும் கவனிக்கத்தக்க பெரிய நடிகர் ரஜினிகாந்த். அவர் என் பேச்சுகளைக் கவனித்து வருகிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் நிர்வாக அமைப்பு கெட்டுக் கிடக்கிறது என்று ரஜினி கூறியதை வரவேற்கிறேன். பழைய கட்டடத்துக்கு வெள்ளை அடிப்பது என்பதைவிட புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT