தமிழ்நாடு

ஏர்செல்-மேக்சிஸ்: சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டில் மாறன் சகோதர்களுக்கு நோட்டீஸ்

DIN


புது தில்லி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்கும்படி மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மாறன் சகோதரர்களை, விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனை எதிர்த்து ஏற்கனவே அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

மேல்முறையீட்டு மனுவில், ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு,  தங்கள் தரப்பு பலவீனமே காரணம். இந்த வழக்கில், மலேசிய தொழிலதிபரை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டியிருப்பதால் மேல்முறையீடு செய்யப்பட்டுளள்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் அளிக்கும்படி மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT