தமிழ்நாடு

ரௌடிகளை ஒடுக்க காவல்துறை தேவைப்பட்டால் ஆயுதங்களை பயன்படுத்தலாம்: முதல்வர் நாராயணசாமி

தினமணி

புதுச்சேரியில் ரௌடிகளை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் தேவைப்பட்டால் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
சரக்கு மற்றும் சேவை வரியின் முக்கியமான கூட்டம் ஸ்ரீநகரில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் எந்தெந்த பொருட்கள் வரி விதிப்பது சம்பந்தமாக முடிவு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி  மாநில நிதி அமைச்சர்களை அழைத்து பேசினார். 

4 விதமான வரி விதிப்பு, பொருட்களின் தன்மை குறித்து வரி விதிப்பது என்று முடிவு செய்ததின் அடிப்படையில், மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களுக்கு எந்தவிதி வரியும் இல்லை என முடிவு செய்யப்பட்டது. 

அதில் நாட்டில் உள்ள மக்கள் பயன்படுத்துகின்ற 50 சதவீத பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீதத்தில் பொருட்களில் தரம் பிரிவித்து சாதாரண மக்கள், நடுத்தர மக்கள், மேல் தட்டில் இருக்கிற மக்கள் என தரம்பிரித்து அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

கட்டடம் கட்டுகிறவர்கள் சேவை வரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேவை வரியின் முழு வரியையும் கடந்த காலங்களில் மத்திய அரசு எடுத்துக்கொண்டது.

இப்பொழுது சேவை வரி சமமாக பிரிக்கப்பட்டு மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரிக்கு நன்மை கிடைக்கும். 

சேவை வரியில் மத்திய அரசின் ஒப்புதல் படி 50 சதவீதம் வரி நமக்கு கிடைக்கிறது.  குளிர்சாதன வசதி இல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீத வரியை குறைத்து 5 சதவீதமாக மாற்றியுள்ளோம். பெரிய ஓட்டல்கள் 12 சதவீதம், 5 நட்சத்திரம் ஓட்டல்களுக்க 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

மதுபானங்களுக்கும், பெட்ரோலிய பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு மாநில அரசுகளே வரி விதிக்கலாம் என கூறியுள்ளது. ஜூலை மாதம் 1-ம் தேதி புதிய நிலைக்கு மாறும் நிலையில் புதுச்சேரி மாநிலம் தயாராக உள்ளது. முதன் முறையாக புதுச்சேரி மாநிலத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியில் வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 

3-ல் இரண்டு பங்கு மாநிலங்கள் சேர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சொன்னால் அதை மாற்றியமைக்க மத்திய அரசு முயற்சிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காரணங்களை ஆராய்ந்து கொலை செய்தவர்களை கைது செய்வது மட்டுமல்லாமல் துரிதமாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளோம். 

தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுடன் பேசி சுற்றுலாப்பயணிகள் அதிகமாக புதுச்சேரிக்கு வருகின்ற காரணத்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். 

காவல்துறையில் ஒருசில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றது. அவர்களை களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே காவல்துறை கண்காணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே காவல்துறையை சேர்ந்தவர்கள் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பதவி நீக்கம் செய்துள்ளோம். எங்களது அரசை பொருத்தவரை புதுச்சேரி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. அதற்காக காவல்துறைக்கு சுதந்திரம் கொடுத்துள்ளோம்.

காவல்துறையில் சிலர் கையூட்டு பெற்று வருகின்றனர். அதை முற்றிலுமாக ஒழிப்போம். ரௌடிகளை ஒடுக்க தேவைப்பட்டால் காவல்துறையினர் ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

பேனர்கள் மற்றும் கட்டவுட்டுகளை வைக்க கூடாத அப்படி வைப்பவர்கள் தனக்கு எதிரிகள். ஏற்கனவே வைக்கப்பட்ட கட்அவுட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. 

மீறி கட்அவுட் பேனர்கள் வைத்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் நகராடசி அதிகாரிகளுடன் இணைந்து அவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியுள்ளேன். அப்படி வசதிபடைத்த கட்சிக்காரர்கள் செலவு செய்யும் எண்ணம் இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்க முன்வாருங்கள் அது ஏழை மக்களின் மருத்துவ செலவுக்கு பயன்படும் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT