தமிழ்நாடு

வைர விழா அழைப்பிதழை கருணாநிதியிடம் நேரில் வழங்கினார் ஸ்டாலின்!

DIN

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் வைர விழா அழைப்பிதழை கருணாநிதியிடம் நேரில் வழங்கினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்து வைரவிழாவுக்கான அழைப்பிதழை அளித்துள்ளனர்.

கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இரண்டையும் இணைத்து திமுக சார்பில் மாபெரும் விழாவாக நடத்த உள்ளோம். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் 3-ஆம் தேதி மாலை 5 மணியளவில் விழா நடைபெறுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரைன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், வைர விழாவில் கருணாநிதி பங்கேற்பாரா என்பதுகுறித்த உறுதித் தகவல் இதுவரை தரப்படவில்லை. 'மருத்துவர்கள் அனுமதித்தால், கருணாநிதி பங்கேற்பார்' என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் அளித்துள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் இருவரும் கழகப் பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து, வைரவிழா அழைப்பிதழை வழங்கினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT