தமிழ்நாடு

புதிதாக 5 தாலுகாக்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

DIN

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 தாலுகாக்களை, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவைப் பிரித்து சிங்கம்புணரி தாலுகாவை முதல்வர் திறந்து வைத்தார். இதனால், சுமார் 55 கி.மீ., தொலைவிலுள்ள திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை மாறி, சிங்கம்புணரிலேயே தங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், பல்வேறு அரசு நல உதவித் திட்டங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள இயலும்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவைப் பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 51 கிராமங்களில் வசிக்கும் 1.1 லட்சம் பேரும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைப் பிரித்து ஆண்டிமடம் வட்டத்தை உருவாக்கியதன் மூலம் 30 கிராமங்களில் வசிக்கும் 1.5 லட்சம் மக்களும் பயனடைவர்.
இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னார்குடி, குடவாசல், திருவாரூர் ஆகியவற்றைச் சீரமைத்து கூத்தாநல்லூர் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 55 கிராமங்களில் உள்ள சுமார் 1.2 லட்சம் மக்கள் பயன் பெறுவர்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகாக்களைச் சீரமைத்து 55 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் பயனடையும் வகையில் புதிதாக கயத்தாறு தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தாலுகாக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT