தமிழ்நாடு

மறைந்த கவிஞர் காமராஜ் உடலுக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி

தினமணி

திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கவிஞர் காமராஜின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கவிஞர் காமராஜர் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறேன். காமராஜ் மொழிப் போராட்டத்தின் போது பல்வேறு தியாகங்களை செய்தவர். குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தின் போது, அவர் கைது செய்யப்பட்டு, கால்களில் விலங்கிட்டு, சிறையில் அடைப்பட்டிருந்த நினைவுகள் எல்லாம் நமது நெஞ்சங்களில் நிழலாடுகின்றன. காமராஜ் ஒரு மிகப்பெரிய கவிஞராக, இலக்கியத்துறையில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தவர்.
 
அவருடைய மொழிப்பற்று, இலக்கியப்பற்று, இனப்பற்று ஆகியவற்றை பாராட்டி பெருமை சேர்க்கும் வகையில், தலைவர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில், காமராஜுக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றார். தலைவர் கருணாநிதி மீது காமராஜுக்கு அளவுகடந்த பாசமும், அன்பும் எப்போதும் இருந்திருக்கின்றது. அரசியலை பொறுத்தவரையில் கவிஞர் காமராஜுக்கு சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படும் நிலை இருந்தாலும், அவருடைய தமிழ் பற்று தலைவர் கருணாநிதியின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து இருந்த காரணத்தால், அவரிடத்தில் எப்போதும் அன்பு காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அப்படிப்பட்ட சிறந்த கவிஞரான காமராஜை இன்றைக்கு இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் – உறவினர்களுக்கும் திமுகவின் சார்பில், குறிப்பாக தலைவர் கருணாநிதியின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT