தமிழ்நாடு

ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குகிறார்: உறுதி செய்தார் அண்ணன் சத்யநாராயணா

நடிகரி ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக, அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

DIN

பெங்களூரு: நடிகரி ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக, அவரது அண்ணன் சத்யநாராயணா உறுதி செய்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யாநாராயணா, அரசியலில் ஊழலை அகற்றிடவே ரஜினிகாந்த் களமிறங்குவதாகவும், ஜூலை மாத இறுதியில் தனிக் கட்சி குறித்து ரஜினி அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,"ரஜினிகாந்த் அரசியலில் நுழைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அரசியலில் நுழைவது குறித்து அவரது தீவிர ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டுள்ளார். அனைவருமே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர்" என்று, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து சத்யநாராயணா கூறியுள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கும் முன்பு, தனது ரசிகர்கள் அனைவரையும் அவர் சந்திக்க விரும்பினார். அதனால்தான் சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசினார். அரசியலில் இனி ஒரு புதிய சகாப்தம் ஆரம்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனை வெல்வோம்! புதின் சூளுரை

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

புத்தாண்டில் குறைந்த தங்கம் விலை! வெள்ளி விலையும்...

எல்லோரும் நல்லா இருப்போம்! ஜன நாயகனின் புதிய போஸ்டர்!

தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் 1930

SCROLL FOR NEXT