தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு

DIN

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள கடையிலிருந்து 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை தியாகராயர் உள்ள சென்னை சில்க்ஸில் இன்று காலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பற்றி எரியும் தீயை அணைக்க, ஹைட்ராலிக் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸ் கடையின் அடித்தளத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தொடர்ந்து 5 மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீயின் வெப்பம் காரணமாக கட்டடத்தில் உள்ள கண்ணாடிகளும் அனைத்தும் உடைந்து நொருங்கி வருகின்றன.

இந்நிலையில், கட்டடத்தின் அடித்தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டடத்தின் ஸ்திரதன்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தீயணைப்பு வீரர்களாலும் கடைக்குள் செல்ல முடியவில்லை. கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அந்த வழியாகச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி தீவிபத்து ஏற்பட்ட கடையை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு, அங்கு தங்கி இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT