தமிழ்நாடு

கொத்தடிமை புகார்: பெண் தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு

DIN

கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமையாக நடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், அங்கு பணியாற்றிய சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண் தொழிலாளர்களை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுôர் அருகே கொளத்துôரில், கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண் தொழிலாளர்களை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கி வருவதாக நாமக்கல் கோட்டாட்சியர் எம்.ராஜசேகரனுக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி, செளந்தரி, தேசிய குழந்தைத் தெழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று புதன்கிழமை காலை திடீர் சோதனை செய்தனர்.
ஆனால், முன்னதாகவே அங்கிருந்த பெண் தொழிலாளர்களை வெளியேற்றி, சின்னபெத்தாம்பட்டியில் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற அக் குழுவினர் 5 பெண் தொழிலாளர்களை மீட்டனர்.
இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT