தமிழ்நாடு

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.79 குறைப்பு

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.79 குறைக்கப்பட்டு, ரூ.559.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பதிவு செய்ய உள்ளோர், இந்த குறைக்கப்பட்ட விலையில் சிலிண்டரைப் பெறலாம்.
வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை கடந்த மே 1-ஆம் தேதி முதல் ரூ.638.50-ஆக இருந்து வந்தது. ஜூன் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ.559.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு? மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ.430.27-லிருந்து ரூ.3.88 உயர்த்தப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் ரூ.434.15-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்து சிலிண்டர் பெறும் வீட்டு சமையல் எரிவாயு நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியமாக ரூ.125.35 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT