முகப்பு
தமிழ்நாடு

மண்டபம் அருகே கடல் சீற்றத்தில் படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி மூழ்கியது. அதிலிருந்த 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி மூழ்கியது. அதிலிருந்த 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
மண்டபத்தில் இருந்து புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 1200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், மீன் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பியபோது, பாம்பன்-மண்டபம் இடையே கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில், சிக்மட் என்பவருக்குச் சொந்தமான படகு கடல் சீற்றத்தில் சிக்கி கடலில் மூழ்கியது. 
இதில் படகில் இருந்த பால்ராஜ், சீனிச்சாமி, முனியசாமி, ரமலான் ஆகிய மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதனைக் கண்ட நாட்டுப்படகு மீனவர்கள் விரைந்து சென்று 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கடலில் மூழ்கிய படகை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →