மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன் மகள் பாவனா (10), மூர்த்தி மகள் யுவஸ்ரீ (8) ஆகியோர் புதன்கிழமை பிற்பகலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸின் முறையீட்டை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.