தமிழ்நாடு

குற்றாலத்தில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை: அனைத்து அருவிகளிலும் வெள்ளம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தென்காசி, குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை இரவு குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நேரடியாக அருவி முன்புறம் உள்ள தடாகத்தில் தண்ணீர் கொட்டியது. இதனால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குற்றாலம் பேரருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
ஐந்தருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பழைய குற்றாலத்தில் பிற்பகல் முதல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
இதனால், சுற்றுலாப் பயணிகள் சிற்றருவி, புலியருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT