ஐபிஎல் சூதாட்ட வழக்கில் லஞ்சம் பெற்ற வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
தமிழ்நாடுஐபிஎல் சூதாட்ட வழக்கில் லஞ்சம் பெற்ற வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2013-இல் ஐ.பி.எல். போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய கவுதம் சந்த் நிமானி, உத்தம் சி.ஜெயின் உள்ளிட்ட 4 பேரை விடுவிப்பதாகக் கூறி, மகேந்திர சிங் ரங்கா, நேமி சந்த் உள்ளிட்டோர் ரூ.1.35 கோடியைப் பெற்று மோசடி செய்துள்ளனர். இத்தொகையில் ரூ.60 லட்சத்தைச் சூதாட்ட வழக்கை விசாரித்த அப்போதைய கியூ பிரிவுக் காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமாருக்கு வழங்கியதாக விசாரணையில் கூறியுள்ளனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை விசாரித்தார். வழக்கில் சில விதிமீறல்கள் உள்ளதால், விசாரணை முழுவதையும் ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் மனுதாரருக்கு எதிராக புனையப்பட்டது எனவும் கூறிவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.