தமிழ்நாடு

தொண்டைமான் பெயர் நீக்கம்: நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

இலங்கை அரசு நிறுவனங்களில் தொண்டைமான் பெயரை மீண்டும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்:
இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பங்காற்றிய தொண்டைமானின் பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து இலங்கை அரசு நீக்கி வருகிறது. இலங்கையின் முன்னேற்றத்துக்காகப் பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள் பாடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுடைய பங்களிப்பையெல்லாம் உதாசீனப்படுத்தும் வகையில், தொண்டைமானின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து இலங்கை அரசு நீக்கியுள்ளது. இலங்கையை, இந்தியா நட்பு நாடாகக் கருதினாலும், அதனுடைய வளர்ச்சிக்குப் பொருளாதார உதவிகளைச் செய்தாலும், இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு மாறாகவே இலங்கை செயல்பட்டு வருகிறது. 
ஈழத் தமிழர்களுக்கு அவர் ஏற்றுக் கொள்ளும்படியான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க மறுத்து வருகிறது.
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரித்துத் தண்டிக்க நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுதந்திரமான விசாரணையை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மேற்கொள்வதற்கும் ஒத்துழைக்க மறுத்து வருகிறது. 
இந்நிலையில் தொண்டைமானின் பெயரை அகற்றி, தமிழர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், ஒரு நட்பு நாட்டின் சமரசமிக்க, பொறுப்புமிக்க எண்ணத்தைப் பிரதிபலிக்கவில்லை. எனவே, தொண்டைமானின் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் கடிதத்தை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தில்லியில் நேரில் சந்தித்து அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT