தமிழ்நாடு

உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க உரிய வசதி செய்யப்படுமா? தமிழகத்தில் தவிக்கும் ஓய்வூதியதாரர்கள்

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க உரிய வசதி செய்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஓய்வூதியதாரர்களிடையே எழுந்துள்ளது.

கே. ஆனந்தபிரபு

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க உரிய வசதி செய்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஓய்வூதியதாரர்களிடையே எழுந்துள்ளது.
 இதற்காக தாங்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். உதாரணமாக சென்னை முகப்பேர் பி.எஃப். மண்டல அலுவலகத்தின் கீழ் சுமார் 40,000 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களில் தினமும் 1,000 பேர் உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பித்தலுக்காக சென்று வரிசையில் காத்திருந்து பதிவு செய்கின்றனர்.
 தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் முறையில் (இணையதளம் மூலம்) உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க சென்னை ராயப்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர் அலுவலகங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது.
 அங்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் வருவதால் அதிக நேரம் காத்துக்கிடக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசால் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.
 இது குறித்து சென்னை ராயப்பேட்டை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலீல் சங்கர் கூறியது:
 சென்னையில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் நவம்பர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாண்டு இச்சான்றிதழை ஆன்-லைன் மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜனவரி 15 வரை அவகாசம்: இச்சான்றிதழை மத்திய
 அரசின் (இஞஙஙஞச நஉதயஐஇஉ இஉசபஉத) எனப்படும் பொது சேவை மையங்கள், தமிழக அரசின் இ-சேவை மையங்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி தலைமை அலுவலகம், தாம்பரம், அம்பத்தூர் மண்டல அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு மையங்கள் மூலம் அச்சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
 ஆனால், ஒரு சில ஓய்வூதியதாரர்கள் மிகத் தொலைவில் இருந்தாலும் தலைமை அலுவலகத்திற்குத்தான் வருகை புரிகின்றனர். ராயப்பேட்டையில் மட்டும் 12 சிறப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 1,200 முதல் 1,500 பேருக்கு இந்தச் சான்றிதழை சமர்ப்பித்து தருகிறோம். இந்த உயிர்வாழ் சான்றிதழை வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அதைத் தவறவிட்டாலும் வரும் ஜன. 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். அதற்குப் பிறகும் சமர்ப்பிக்காதவர்களுக்குத்தான் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் செலுத்தப்பட மாட்டாது.
 மேலும் தமிழக அரசின் இ-சேவை மையங்களில் இந்தச் சேவையை வழங்க வேண்டும் என அந்தத் துறையின் இயக்குநரிடம் பேசி உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளிலும் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றைப் பதிவு செய்யலாம். இதுகுறித்து வங்கிகளின் உயரதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்தச் சேவையை பயன்படுத்தி, உயிர்வாழ் சான்றிதழை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 இ-சேவை மையங்களில்: தமிழக அரசின் இ-சேவை மையங்களில் பணிபுரியும் அலுவலர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை இந்தச் சேவை மையங்களில் பெறலாம். அதற்காக அவர்கள் ரு.10 செலுத்தினால் போதுமானது. ஆனால் அவர்கள் வரும் போது போதிய ஆவணங்களை எடுத்து வருவதில்லை. மேலும் நெட்வொர்க் பிரச்னை அவ்வபோது ஏற்படுவதால் சில நேரங்களில் காலதாமதமாகிறது என்றனர்.
வங்கிகளிலும் சமர்ப்பிக்கலாம்
 வங்கிகளில் ஓய்வூதியதாரர்களுக்காக வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கும் பணியை ஓய்வூதியதாரர்கள் செய்து கொள்ளலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஓய்வூதியதாரர் ஒருவர் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளாரோ அந்த வங்கிக்கு ஓய்வூதியம் பெற்றுவருவதற்கான ஆர்டர் அசல் மற்றும் நகல் ஒன்று, ஆதார் அட்டை, பதிவு செய்துள்ள தங்களது செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சென்று வாழ்நாள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதுவும் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். காரணம் பல வகையான ஓய்வூதியத்தை வழங்கி வருவதால் இந்த நிலை. மேலும் நடக்க இயலாத மற்றும் படுக்கையில் உள்ள ஓய்வூதியதாரர் அவர் வசிக்கும் இடத்தில் அருகாமையில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று இந்த வசதியைப் பெறலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சில வங்கிகளில் "ஸ்கேனர்' கருவிகள் இல்லை என வாழ்நாள் சான்றை புதுப்பிக்க முடியாது எனக் கூறி பி.எஃப். ஓய்வூதியதாரர்களை திருப்பி அனுப்புகின்றனர். அவ்வாறு திருப்பி அனுப்புவது தவறு. ஏனெனில் வங்கி ஊழியர்கள் ஸ்கேனர் கருவி இன்றி ஆன்லைன் மூலம் "சாஃப்ட்வேர் லிங்க்' மூலம் வாழ்நாள் சான்றை புதுப்பித்து ஓய்வூதியதாரர்களுக்கு உதவ முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகுஜன் சமாஜ் கட்சியைத் தடுக்க ரகசிய கூட்டணி: மாயாவதி குற்றச்சாட்டு!

மகளிர் உலகக் கோப்பை: கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

குன்றுகளை தகர்த்து, ஆறுகளை மடைமாற்றி... உருவாக்கப்பட்ட நவி மும்பை விமான நிலையம்!

இருமல் மருந்து: ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக உயர்வு!

மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!

SCROLL FOR NEXT