தமிழ்நாடு

சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா? தமிழக காவல் துறையிடம் ஆலோசனை கேட்கும் கர்நாடகா!

DIN

பெங்களூரு: அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என்று தமிழக காவல்துறையிடம் கர்நாடகா ஆலோசனை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை தணடனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலா தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு  உள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது அவரது கணவரான நடராசன் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக அவரை பார்க்கும் பொருட்டு 15 நாட்கள் அவசர பரோல் கேட்டு சசிகலா சார்பில் சிறை நிர்வாகத்திடம் இன்று காலை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என்று தமிழக காவல் துறையிடம் கர்நாடகா ஆலோசனை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா? அவ்வாறு அவருக்கு பரோல் வழங்கப்படுவதாக இருந்தால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இயலுமா? அவரது கணவர் நடராசன் உடல்நிலை தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைதானா?

இவ்வாறு அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT