தமிழ்நாடு

கண்டுபிடிப்பாளர் போட்டியில் அசத்திய மாணவர்கள்

DIN

'சமூகத்துக்கு கடலின் உபயோகம்' என்ற தலைப்பில் மாணவக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வைத்து பள்ளி மாணவர்கள் அசத்தினர். காட்சிப்பொருள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'சமூகத்துக்கு கடலின் பயன்பாடு' என்னும் தலைப்பில் மாணவ கண்டுபிடிப்பாளர் போட்டி கோட்டூர்புரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் வியாழக்கிழமை நடந்தது. 
நிகழ்ச்சியில், சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆர்.பழனிச்சாமி பேசுகையில், ''நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகள் மூலம் நமது பிரச்னைகளைத் தீர்க்க முடியும்'' என்றார்.
தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப செயல் இயக்குநர் ப.ஐயம்பெருமாள் பேசுகையில், ''இன்றைய காலத்தில் கண்டுபிடிப்பு முக்கியம். கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் காப்புரிமை வாங்க உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி, மதுரை, சேலம், திருச்சி நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 128 பள்ளிகளைச் சேர்ந்த 358 அறிவியல் காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டன. வாகனத்தை ஆழ்கடல் நீர்நிலையில் இயக்கி, அடிப்படை தாதுக்கள் கண்டுபிடிக்கும் முறை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இது தவிர, கடலில் வெப்ப நீரோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புதிய முறை, கடல் மாசு அடைவதை தடுக்க மின்சாரத்தை உற்பத்தி செய்து தூய்மைப்படுத்தல் முறை, ஆழ்கடலில் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கும் முறை உள்பட 358 அறிவியல் காட்சி பொருள்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதில், 20 அரசு பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்து அசத்தினர். 
சென்னை தியாகராய நகர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி மாசை குறைப்பது, கடல் அருகே தொழிற்சாலை வருவதால், ஏற்படும் அதிர்வை தடுப்பது உள்பட 3 காட்சிப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு காட்சிப் பொருள்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருள்களில் இருந்து, 44 காட்சிப் பொருள்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளன. நிலை-1, நிலை-2 என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிலை -1இல் 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களும், நிலை-2-இல் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்றனர். இதில் முதல் 14 இடங்களைப் பிடிக்கும் காட்சிப் பொருள்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடக்கும் சர்வதேசக் கண்காட்சியில் வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT