தமிழ்நாடு

கேளிக்கை வரி: முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு

DIN

கேளிக்கை வரி குறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து பேச தமிழ்த் திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். 

தமிழக அரசின் 10 சதவீத கேளிக்கை வரி விதிப்புப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை ( அக்.6) முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கும் வரை இந்த முடிவில் மாற்றமில்லை என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

படங்கள் வெளியாகவில்லை: வெள்ளிக்கிழமை (அக்.6) வெளியாக வேண்டிய 'விழித்திரு', 'உறுதி கொள்' உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகவில்லை. 
 

திரையரங்குகள் இயங்கின: இதனிடையே திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை ( அக்.6) வழக்கம் போல் இயங்கின. கடந்த வாரங்களில் வெளியான படங்களே, இந்த வாரமும் திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது. 

தமிழகத்தில் ஐநாக்ஸ், பி.வி.ஆர் ஆகிய இரு மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் தவிர மற்ற திரையரங்குகள் அனைத்திலும் படங்கள் திரையிடப்பட்டன. சென்னை, திருச்சி, கோவை நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வழக்கம் போல் இணையதள டிக்கெட் விற்பனையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

முதல்வரை சந்திக்கத் திட்டம்: இதற்கிடையே, கேளிக்கை வரி குறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து பேச திரையுலக அமைப்புகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக, தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT