தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

DIN

அரபிக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக உருவாகும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 170 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது: கேரளம் மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.
புதன்கிழமை பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்): 
ஒகேனக்கல் - 170, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் - 100, கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி, வேலூர் மாவட்டம் மேலாத்தூர், குடியாத்தம் - 90, பென்னாகரம் -80, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, உளுந்தூர்பேட்டை, ராசிபுரம், ஏற்காடு, அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டா, பரமத்திவேலூர், சேலம் - 70, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாமக்கல் - 60.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT