தமிழ்நாடு

விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்: மு. தம்பிதுரை

DIN

தங்களுக்கு மிக விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
திருச்சியில் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமான தினமலர் ஆசிரியர் ஆர். ராகவனின் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆறுதல் கூறிய பின்னர் அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தான் பிரதமரைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை, தங்களுக்குள் கருத்து வேறுபாடும் இல்லை என்று துணை முதல்வரே தெரிவித்திருக்கிறார். 
இரட்டை இலை சின்னம் பெற ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பெற்றது தொடர்பாக விசாரணையும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்விரு வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்துக் கூற விரும்பவில்லை. தங்கள் அணிக்கு விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இந்த ஆட்சி சிறப்பாக செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT