தமிழ்நாடு

புளூவேல் போல மற்றொரு விபரீத விளையாட்டு: துண்டுப் பிரசுரத்தால் பரபரப்பு

தினமணி

புளூவேல் போல மற்றொரு விபரீத விளையாட்டு விளையாடப்படுவதாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

புளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டால் மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் தற்கொலையும் செய்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இந்த விளையாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து போலீஸார் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், புளூவேல் போன்று ரோபோ தொடர்பான ஒரு விபரீத  விளையாட்டும் விளையாடப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தப் பிரசுரங்களில் பொள்ளாச்சி, சமத்தூரைச் சேர்ந்த இளைஞரின் பெயரில் உள்ளது. மேலும், இதுகுறித்து காவல் துறையினரும் புகாரை வாங்க மறுக்கின்றனர். எனவே, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT