தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

தினமணி

இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை புதுச்சேரியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வாசல்களில்
சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையினை உற்சாகத்துடன் கொண்டாடினர். இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது. பக்ரீத் பண்டிகையினையொட்டிதான் அது நிறைவேற்றப்படுகின்றது. மேலும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும்
நோக்கத்திலும் இந்த பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையினை
உற்சாகமாக கொண்டாடினர்.

முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், முஹமதியா பள்ளி வாசல், சின்ன சுப்ராயபிள்ளை வீதி முஹமது பூரா பள்ளி வாசல், தட்டாஞ்சாவடி நூரே முஹமதியா பள்ளி வாசல், புதிய பேருந்து நிலையம் மஸ்ஜிதே முஹமதியா பள்ளி வாசல், நெல்லித்தோப்பு ஈத்காஹ் பள்ளி வாசல், லாஸ்பேட்டை நூரே ஹிதாயதுல் இஸ்லாமியா பள்ளி வாசல், கோவிந்தசாலை மஸ்ஜிதுந்நூர் பள்ளி வாசல், பெரியகடை மஸ்ஜிதே இஸ்லாமியா பள்ளி வாசல், ஜேஜே நகர் மஸ்ஜிதே சலாமத் பள்ளி வாசல் உள்பட புதுவையில் உள்ள 30 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

இதில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொண்டனர். இதேபோல் காந்தி திடலிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT