முகப்பு
தமிழ்நாடு

வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: கமல் கருத்து

வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படிப்பு படித்து வந்தவர் வளர்மதி. இவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். மேலும், இது தொடர்பான போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கில், குண்டர் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கமல் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.