தமிழ்நாடு

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

DIN

1993-ம் வருடம் மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. மும்பையின் 12 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

இதன்காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டது.

இதில் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், அவனது கூட்டாளிகளான அபு சலீம், முஸ்தஃபா தோஸ்ஸா, கரிமுல்லா கான், ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்சண்ட் மற்றும் அப்துல் க்யுயாயும் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளான அபுசலீம் உள்ளிட்ட ஏழு பேரும் ஜுன் 16, 2017 அன்று குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஜுன் 28-ந் தேதி 2017-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக குற்றவாளிகளில் ஒருவரான முஸ்தஃபா தோஸ்ஸா உயிரிழந்தான். இதையடுத்து இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், அபு சலீம் உள்ளிட்ட 5 பேர் மீதான இறுதி தண்டனை விவரத்தை வருகிற செப்டம்பர் 7-ந் தேதியன்று அறிவிக்கப்படும் என தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT