தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியை சபரிமாலா ராஜிநாமா

DIN

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியை தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் சபரிமாலா. இவர் நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தி தனது 7 வயது மகனுடன் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தார். 

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபரிமாலா இன்று தனது ஆசிரியை பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சபரிமாலா, என்னுடைய ராஜிநாமாவை அனிதாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அனிதாவின் தற்கொலை மாணவர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் நலன் காக்காத அரசின் பணி எனக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT