தமிழ்நாடு

100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் அரிய வகை கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மண்டபம் துறைமுகம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய தீவிர விசாரணையில் 100 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரின பட்டியலில் இந்த வகை கடல் அட்டைகள் இடம்பெற்றுள்ளன. எனவே இதனை வைத்திருப்பது, கடத்துவது, சட்டப்படி குற்றமாகும்.

எனவே, ராமநாதபுரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பி.செல்வராஜ் என்பவர் இந்த 100 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT