தமிழ்நாடு

கல்லணைக்கு வந்தது காவிரி நீர்

DIN

காவிரி மகா புஷ்கர விழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தது.

இதையடுத்து, கல்லணையிலிருந்து காவிரியில் மட்டும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் புஷ்கர விழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து செப். 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணைக்கு வந்த தண்ணீர் வெள்ளிக்கிழமை காலை காவிரியில் வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது. பின்னர், வினாடிக்கு 2,000 கனஅடி வீதமாக உயர்த்தப்பட்டது. இது படிப்படியாக வினாடிக்கு 3000 கனஅடி வீதமாக உயர்த்தப்படும்.
எனவே, காவிரி கரையோரப் பொதுமக்கள் காவிரி ஆற்றைக் கடந்து செல்பவர் மற்றும் புனித நீராடும் பக்தர்கள் கவனத்துடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT