தமிழ்நாடு

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை: நெல்லை அரசு மருத்துவமனை சாதனை

DIN

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 7 மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் வி. கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த சந்தானம் மகன் சக்திவேல் (36). இவரது மனைவி வள்ளித்தாய் (34), சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சக்திவேல் சிறுநீரகம் வழங்கியதை அடுத்து வள்ளித்தாய்க்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் க. சித்தி அத்திய முனவரா, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம்
கூறியது:
நீண்ட காலமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வள்ளித்தாய், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் ச.சக்திவேல் சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து அவருக்கு இம்மாதம் 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தற்போது வள்ளித்தாய் நலமாக இருக்கிறார். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் வள்ளிதாய்க்கு
இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகலாம்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இது 7 ஆவது மாற்று அறுவை சிகிச்சையாகும். அரசு மருத்துவமனையில் கடந்த 2015 செப். 30 ஆம் தேதி மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 7 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இச்சிகிச்சையை சிறுநீரகத் துறைத் தலைவர் வி. ராமசுப்பிரமணியம் தலைமையில் மருத்துவர்கள் பி.கே. செந்தில்குமார், பி. திருவாசகமணி, ஷோபா கணேஷ், செல்வராஜன், விஜய் ஆனந்த், ஜெயக்குமார், அபிராமி, மார்வின் மோனவா, கவிதா உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் செய்தனர்.
மாதம் 2 மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யத் தேவையான கட்டமைப்பு, இந்த மருத்துவமனையில்
மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கை மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அரசு மருத்துவமனையில் சங்கரன்கோவில், தென்காசி, வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 11 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
பேட்டியின்போது, மக்கள் தொடர்பு அலுவலர் சி. ரேவதி பாலன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT