தமிழ்நாடு

மாணவி அனிதா மரணம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி. தலைமையில் குழு விசாரிக்கும்

DIN


அரியலூர்: மாணவி அனிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் குழுமூர் கிராமத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் இன்று விசாரணை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முருகன், மாணவி அனிதா மரணம் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை எஸ்பி தலைமையிலான குழுவும் விசாரணை நடத்தும்.  

இவ்விரு தரப்பினரும் விசாரணை செய்து, அனிதா மரணம் குறித்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனிதா குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று முருகன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT