தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்

DIN

விமான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: 
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இது அடுத்த சில ஆண்டுகளில் 3 கோடி முதல் 3 .5 கோடியாக உயரும். இதைக் கருத்தில் கொண்டு புதிய முனையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் பயன்பாடு, தேவைக்கேற்ப விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். சென்னைக்கு அருகே புதிய பசுமை விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
விமான போக்குவரத்து மூலம் சிறு நகரங்களை இணைக்கும் திட்டமான உடான் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து மைசூருக்கு விமான சேவை புதன்கிழமை (செப். 20) தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் விஜயநகர் -ஹைதராபாத்துக்கு விமான சேவை வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தியாவில் 75 ஆண்டுகால விமானப் போக்குவரத்து சேவையில் மிகப்பெரிய வெற்றியாக உடான் திட்டம் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் வீதம், 75 விமான நிலையங்கள் தற்போது உள்ள நிலையில், உடான் திட்டத்தின்கீழ், ஓர் ஆண்டில் 30 புதிய விமான நிலையங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையை தவிர, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் சர்வதேச விமானப் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சேவையை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இதேபோல், சிறுநகரங்களிலும் விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT