தமிழ்நாடு

அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார்: பன்னீர்செல்வம் புகழாரம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

DIN


சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வழங்கினார். 

இதற்கான நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேணடும் என்று ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தற்போதும் கல்வி துறை மிக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT