தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அதிரடி கேள்வி

DIN


சென்னை: ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாக்டோ    - ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதாவது, ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவு தந்த கட்சிகள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து குரல் கொடுக்காதது ஏன்? 

அரசுத் துறை அதிகாரிகளை கேள்வி கேட்பதால் நீதித் துறையைப் பற்றிய விமரிசனங்களை ரசிக்கிறார்களா?

குமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

அரசியல்வாதிகளை விமரிசிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போது, நீதிபதிகளை விமரிசிப்போர் மீதான நடவடிக்கைக்கு ஏன் தாமதம்? என்று கேள்விகளை எழுப்பினார்.

இணையதளத்தில் விமரிசனம் செய்தவர்கள் யார் என கண்டறிய வேண்டும். நீதிபதிகள், நீதிமன்றங்கள் மீதான விமரிசனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி காட்டமாகக் கூறினார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு, சமூக வலைத்தளங்களில் நீதித் துறையை விமரிசித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.

இதையடுத்து, நீதித் துறையை விமரிசித்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை பற்றி நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்துக்கு எதிராக கருத்துப் பதிவிட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அக்டோபர் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT