தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக வழக்கு

DIN


சென்னை: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தினகரன் அணியில் இணைந்து, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்எல்ஏக்களும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தினகரன் அணியில் இணைந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படும் போது, தனி அணியாக பிரிந்து செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இதே கருத்தை வலியுறுத்தி, ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்ரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வருக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உட்பட 12 பேரும் வாக்களித்தனர். இது தொடர்பாக வெற்றிவேல், ரெங்கசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அவைத் தலைவரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் உட்பட  12 பேரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT