தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

DIN

மலேசியாவுக்கு கடத்த முயன்ற கரன்சி மற்றும் அங்கிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் ஆகியவற்றை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து திங்கள்கிழமை இரவு திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மதுரையைச் சேர்ந்த செல்வராணி என்பவர் தனது உடைமைகளுக்குள் 400 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமான பயணி சென்னையைச் சேர்ந்த ரேணுகா என்பவர், தனது ஸ்ட்ரோலர் பேக்கில், உடைமைகளுக்குள் ரூ. 3.89 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் தாள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்ரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT