தமிழ்நாடு

தெர்மாகோல் சாதனையாளர் செல்லூர் ராஜூ கூறியதும் பொய்யே: துரைமுருகன்

ஜெயலலிதாவை பார்த்ததாக தெர்மாகோல் சாதனையாளர் செல்லூர் ராஜூ கூறியதும் பொய்யே என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

DIN

ஜெயலலிதாவை பார்த்ததாக தெர்மாகோல் சாதனையாளர் செல்லூர் ராஜூ கூறியதும் பொய்யே என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையே வேண்டும். ஜெயலலிதாவின் இறப்பு சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. திண்டுக்கல் சீனிவாசன் பொய்தான் கூறினோம் என பதவிப்பிரமாணம் போல் கருத்து கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் கருத்தை மறுக்க வேண்டிய பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. 

சீனிவாசன் கருத்து பற்றிய முதல்வர், துணை முதல்வரின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி. வைகை அணையை தெர்மாகோலால் மூடும் சாதனையாளர் செல்லூர் ராஜூ கூறியதும் பொய்யே. பொய்யை எத்தனை முறை மறைத்தாலும் உண்மை என்பது வெளிவந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது தாம் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT