தமிழ்நாடு

நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தோம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சையின்போது தான் உள்பட அனைத்து அமைச்சர்களும் நேரில் சென்று பார்த்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ

DIN

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சையின்போது தான் உள்பட அனைத்து அமைச்சர்களும் நேரில் சென்று பார்த்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இது குறித்த விவரம்:- 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று கூறியது பொய்; அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தக் கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கமிஷன் அமைத்து தமிழக அரசு திங்கள்கிழமை (செப்.25) உத்தரவிட்டது. 
இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயல்லிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்'' எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT